சினிமா

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த சீமான்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படத்தில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மாலை மலர்

தற்போது புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடங்காதே'. சென்னை, வாரணாசி, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இவர்கள் கூட்டணியில் தற்போது சீமானும் இணைந்திருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜி.வி.பிரகாஷ், சீமான் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.