சினிமா

ஜெயம்ரவியுடன் ஜோடியாக நடித்தது அதிர்ஷ்டம்: சாயிஷா

என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என சாயிஷா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...

மாலை மலர்

தமிழ் படங்களில் நடிப்பது குறித்து சாயிஷா கூறும் போது....


“தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள எனக்கு ‘வனமகன்’ படத்தில் தமிழ் முன்னணி நடிகர் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால் முதலில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. ஆனால் நான் சந்தித்த முதல் நாளே அவர் சகஜமாக பழகினார். தமிழுக்கு நான் புதுவரவு. என்றாலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்து கொண்டார். அது அவர் மீது எனது மரியாதையை அதிகப்படுத்தியது. சில காட்சிகளில் நான் அதிக டேக் வாங்கினாலும், அவர் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் மீண்டும் மீண்டும் என்னுடன் நடித்தார்.