சினிமா

கார்த்தி ஜோடியாகும் சாயிஷா சய்கல்

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, கார்த்தி அடுத்ததாக `பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசைமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கார்த்தி ஜோடியாக நடிக்க வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சய்கலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சாயிஷா தற்போது விஜய் சேதுபதி உடன் `ஜுங்கா' படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT