சினிமா

சாவித்ரி வாழ்க்கை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக இயக்கியிருக்கிறார். 

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். 

இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உகாதி பண்டிகையை முன்னிட்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக படத்தை மார்ச் 29-ஆம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், திரையுலகில் நடக்கும் போராட்டத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati

SCROLL FOR NEXT