நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `சதுரங்க வேட்டை'.
இதன் 2-ம் பாகமான சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, திரிஷா நடித்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோ பாலா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரவிந்தசாமி தரப்பிடம் பட வெளியீட்டுக்கு தடை கேட்காத பட்சத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அரவிந்த்சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்துசேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரவிந்த்சாமி தரப்பு வாதத்தை கேட்ட ஐகோர்ட்டு வழக்கை செப்டம்பர் 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று மனோபாலா தரப்பு அளிக்கும் பதிலை வைத்து அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி கிடைக்குமா? என்று தெரிய வரும். #SathurangaVettai2 #ArvindSwamy