`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து வந்தார்.
மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.