சினிமா

சசிகுமார் படத்தில் சரத்குமார், பாரதிராஜா

என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Sasikumar #NVNirmalKumar

மாலை மலர்

சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது. #Sasikumar #NVNirmalKumar #SarathKumar #Bharathiraja