சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் மூன்று பாடல்களை எழுதுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது,
`எஸ்.கே.14 படத்தின் மூலம் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைகிறேன். அவரது மயக்கும் இசைக்கு அடுத்தடுத்து மூன்று பாடல்களை எழுதுகிறேன். வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிக்க இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan