`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசும்போது, ‘இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். ஏ சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.
இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை. அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம்’ என்றார்.
இந்த மாதிரி படங்களில் கவுதம் கார்த்திக் நடித்தால் அவருடைய இமேஜ் பாதிக்காதா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு, கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது’ என்றார்.
கவுதம் கார்த்திக்கிடம் இப்படம் பற்றி அப்பா எதுவும் சொல்ல வில்லையா என்று கேட்டதற்கு, ‘இந்தப் படத்தை பார்க்க என் அப்பா ஆர்வமாக இருக்கிறார். எப்போது வெளியாகும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்' என்றார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற படத்தை எடுத்தால் அதை அதிகப் படுத்துவதுபோல் இருக்காதா என்று கேட்டதற்கு, இந்தப் படத்தில் சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள், அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்’ என்றார்.