இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ராதாரவி, ராதிகா சரத்குமார், கோவை சரளா, தம்பி ராமையா, `நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, இளவரசு, தேவதர்ஷினி, வாசுவிக்ரம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை- விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், எடிட்டிங்-டி.எஸ். சுரேஷ், கலை-லால்குடி என். இளைய ராஜா, ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன்,
எழுத்து, இயக்கம் - ஐக். படம் பற்றி அவர் கூறும் போது....
" `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்பது கிராமத்து குழந்தைகள் ஒரு விளையாட்டில் பாடும் பாடல். அதைத்தான் இந்த படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறேன். இது குடும்ப கதை என்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும். நாயகன் ஜீவா, நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட அனைவரும் அருமையான நடிப்பை கொடுத் திருக்கிறார்கள். இதில் விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத் பாடி இருக்கிறார்கள்'' என்றார்.
படம் பற்றி நாயகன் ஜீவா, சொல்கிறார்.... "இதன் இயக்குனர் ஐக், எம்.ஆர். ராதாவின் குடும்பத்தில் இருந்து வந்தவர், திறமைசாலி. ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விடக்கூடாது. வெற்றியைவிட குடும்பம் முக்கியமானது என்பதை இயக்குனர் ஐக் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.