சினிமா

சங்கமித்ரா படத்தின் புதிய அப்டேட்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா, திஷாபடானி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா படானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வரலாற்று சம்மந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு ஸ்பெஷலாக தொடங்க இருக்கிறார்கள். இரண்டு பாகமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.

இப்படம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT