சினிமா

சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh 

SCROLL FOR NEXT