சினிமா

சமுத்திரக்கனி நடிக்கும் ”கஸ்தூரி வீடு” திரைப்படத்தின் டீசர் வெளியீடு.!

தமிழில் இதற்கு முன் இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்.ஆர்.ஆனந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

விஜய்.ஆர்.ஆனந்த்

ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ் மற்றும் அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இயக்குநர் விஜய்.ஆர்.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் கஸ்தூரி வீடு.

இப்படமானது அறிவியல் புனைகதை மற்றும் ஃபேண்டஸி திகில் கலந்த படமாக தயாராகி வருகிறது.

இதற்கு முன்னர் இயக்குநர் தமிழில் 2010 ல் தம்பி அர்ஜுனா, 2017ல் விளையாட்டு ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கஸ்தூரி வீடு

இயக்குநர் விஜய்.ஆர்.ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் கஸ்தூரி வீடு திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் விழாவானது சென்னையில் உள்ள வடபழனி கமலா திரையரங்கில் நடைப்பெற்றது.

இத்திரைப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பேசும்போது

படத்தின் டீசர் விழாவில் பேசிய இயக்குநர், முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இந்த 'கஸ்தூரி வீடு'.

இந்த படத்திற்கு சமுத்திரகனி சார் வந்த பிறகு, பெரியபடமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்கு பயமாக இருந்தது. தயக்கமாக இருந்தது. ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார் என்று படம் எடுக்கப்பட்டதன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

படத்தின் கதாநாயகன் பற்றி சொல்ல வேண்டும்,அவரைப் பார்த்தபோது 'வருஷம் 16' கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் அற்புதமான திறமைசாலி. சொல்வதை எளிதாகப் புரிந்து கொண்டு சரியாக நடித்துக் கொடுப்பார்.

சமுத்திரக்கனி திரைப்படம் குறித்து பேசும்போது

நடிகர் சமுத்திரகனி பேசும்போது இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். ஒரு நல்ல பயணம் இது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன். அதுதான் நிஜம். நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும். அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம் என்று தெவித்தார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! இதில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் நம் திரைப்படம் நிச்சயமாக மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT