சினிமா

தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் தொண்டன்

சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தொண்டன்’ படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்களுக்கும் மேலாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் வருகிற மே 26-ந் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை முதல் திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கவிருக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஆர்.மணிகண்டன் இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.