சினிமா

நெல்லையில் மீண்டும் துவங்கிய சாமி-2 படப்பிடிப்பு

டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்தின் படப்பிடிப்பு நெல்லை மீண்டும் துவங்கிய நிலையில், படப்பிடிப்பை காண ரசிகர்கள் மற்றும் மக்கள் குவிந்துள்ளனர். #SaamySquare #Vikram

மாலை மலர்

நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த தியேட்டரின் பெயரை பி.பி. தியேட்டர் என பெயர் மாற்றி, அங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் சினிமா திரையிடப்பட்டு உள்ளது போல் பேனர்களும் கட்டி இருந்தனர். அந்த படத்தை பார்க்க மக்கள், டிக்கெட் கவுண்டரில் முண்டியடிப்பது போலவும், அரசியல்வாதிகள் வரிசையாக நிற்பது போல் துணை நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. டைரக்டர் ஹரி தலைமையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது.


நெல்லை தியேட்டரில் சாமி-2 படப்பிடிப்பு டைரக்டர் ஹரி தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

சாமி, முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருந்தார். 2-வது பாகத்தில் அவருடைய மகனாக வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அவர் தொடர்புடைய காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் நெல்லையில் இந்த படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.