விக்ரம் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த திரிஷாவும், கீர்த்தி சுரேசும் கதாநாயகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. திருநெல்வேலியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் திரிஷா திடீரென்று சாமி-2 படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விலகி விட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். நடிகர் சங்கம் திரிஷாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனாலும் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்து நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி விட்டார். சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இதனால் சாமி-2 படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். சாமி படத்தின் தொடர்ச்சி என்பதால் திரிஷாவின் கதாபாத்திரம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.