சினிமா

நடிகையர் திலகம் - சிட்டாய் பறந்த சமந்தா

நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் தனது காட்சிகளை முடித்துவிட்டதாக சமந்தா கூறியிருக்கிறார். #NadigaiyarThilagam #Samantha

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். 

இதில் பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்களை நடித்து முடித்ததில் மகிழ்ச்சி என்றும், சாவித்ரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். 

இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati #Samantha

SCROLL FOR NEXT