சினிமா

மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா

விஜய்யின் 61-வது படம் உள்ளிட்ட 6 படங்களில் நடித்து வரும் சமந்தா மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

“ஒரு நல்ல பாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ‘ரிஸ்க்' எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது. என்றாலும், நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.