இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. நாயகன்-நாயகிக்கு நெருக்கமான காதல் காட்சிகளும் இருக்கின்றன. இதில் சல்மான்கான், கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குனர் வைத்து இருந்தார். படத்துக்கு அந்த காட்சியால் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். படம் பிரபலமாகும் என்று இயக்குனர் திட்டமிட்டு இருந்தார்.
இது பற்றி சல்மான்கானிடம் இயக்குனர் கூறினார். ஆனால், சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். பலமுறை இயக்குனர் வற்புறுத்தி கூறியும், முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.