கவின், சாக்‌ஷி அகர்வால் 
சினிமா

கவின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த சாக்‌ஷி அகர்வால்

நடிகர் கவினின் குடும்பத்தினர் பிரச்சனையில் இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

மாலை மலர்

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்‌ஷி அகர்வால் அந்த வீட்டில் கவினுடன் பழகினார். பின்னர் இருவருக்கும் இடையே மோதல் வர வெளியேறினார்.

வெளியேறியவர் கவின் மீது குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்நிலையில் கவினின் குடும்பம் மோசடி புகாரில் சிக்கி சிறைத்தண்டனை பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானபின் சமூக வலைதளங்களில் கவினும் அவரது குடும்பத்தினரும் விமர்சிக்கப்பட்டனர். சாக்‌ஷி, கவின் குடும்பத்தினரை விமர்சிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

'இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரை கிண்டலடிக்க வேண்டாம் என என் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களை கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வருகிறது.