மலையாளத் திரைப்பட நடிகர் சைஜு குருப் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பஃபாபா யுனைடெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை நாசர் இரிம்பிலியம் மற்றும் டாக்டர் ஹாரிஸ் கே.டி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். முன்வர் வளஞ்சேரி உடன் இணைந்து இவர்களே திரைக்கதையும் எழுதியுள்ளனனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்ட்ரை சைஜு குருப் தனது சமூகவலைதளத்தில் இதனை பகிர்ந்துள்ளார்
வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் சைஜு குருப் இரு பதின்ம வயது சிறுவர்களைத் தனது பைக்கின் பின்னால் அமர வைத்து ஓட்டிச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வக் கதை இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், இதன் போஸ்டருடன் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளை வைத்துப் பார்க்கும்போது, இது கால்பந்து விளையாட்டையும் பதின்ம வயதுச் சிறுவர்களையும் மையமாகக் கொண்ட ஒரு கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது