தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்கள். அது போன்று ‘டார்ச்லைட்’ படத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் சதா நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல்மஜித் இயக்குகிறார்.
‘டார்ச்லைட்’ படத்தில் சதாவுக்கு விலைமாது வேடம். இது பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜித்...
“பாலியல் தொழிலாளி பற்றிய பல கதைகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த கதை அது போன்றது அல்ல. இந்த தொழிலில் ஈடுபடும் சிலரை சந்தித்து, அவர்கள் பின்னணி குறித்து கேட்டேன். அப்போது எந்த சூழ்நிலையால் இந்த தொழிலில் இறங்க நேர்ந்தது என்பதை கூறினார்கள். சிலர் கணவரை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் இதை செய்கிறார்கள். வியாபார நோக்கத்தில் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். சதாவின் விலைமாது வேடத்திற்கு இந்த படத்தில் முக்கியமான பின்னணி உள்ளது. கதையை நான் அவரிடம் சொன்ன போது கேட்டு கண்ணீர் விட்டார்.