சினிமா

நெப்போலியன் படத்தை ரீமேக் செய்யும் ஆர்.கே.சுரேஷ்

நெப்போலியன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ்.

மாலை மலர்

தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது பில்லா பாண்டி படம் உருவாகி உள்ளது. இதில் அஜித் ரசிகராக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தின் உரிமையை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார். தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான 'தர்மதுரை'க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே.சுரேஷுக்கு ‘நெப்போலியன்’ படத்தின் கதை மிகவும் பிடித்துப்போகவே ரீமேக் உரிமையை வாங்கி விட்டார்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் எதிர்பாராத பல முக்கியமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இந்தியிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இதில் நடிக்க வருகிறார். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள 'நெப்போலியன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.