சினிமா

ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்த ஆர்.கே.சுரேஷ்

ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு ஆர்.கே.சுரேஷ் புதிதாக நற்பணி மன்றம் ஆரம்பித்துள்ளார்.

மாலை மலர்

தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து புரோமோஷன் ஆகி கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில், ‘பில்லா பாண்டி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என்றவர் அஜித். ஆனால் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்.கே. சுரேஷ் எங்க குல தங்கம் அஜித் நற்பணி மன்றம் என்று எழுதப்பட்டிருக்கும் உடையை அணிந்திருக்கிறார். மற்றொரு போஸ்டரில் அவரது தோள்பட்டையில் அஜித் படத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.