சினிமா

விலைமாதுவாக நடிக்கும் ரித்விகா

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களின் மூலம் பிரபலமான நடிகை ரித்விகா அடுத்ததாக நடித்து வரும் படத்தில் ஒரு விலைமாதுவாக நடிக்கிறாராம்.

‘மெட்ராஸ்’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அடுத்து ‘கபாலி’, ’ஒரு நாள் கூத்து’, ‘இருமுகன்’ உள்பட பல படங்களில் நடித்தார். கவர்ச்சியாக நடிக்க விரும்பாத இவர் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது சதா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘டார்ச்லைட்’ படத்தில் ரித்விகா விலைமாது வேடத்தில் நடிக்கிறார். இது மிகவும் முக்கியமான பாத்திரம். ‘மெட்ராஸ் படத்துக்கு பிறகு இந்தபடம் பெரிதாக பேசவைக்கும் படமாக இருக்கும் என்று ரித்விகா நம்புகிறார்.

SCROLL FOR NEXT