சினிமா

செஞ்சுடரே.. ஒம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்ட அபயங்கர்

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஓம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஓம் படத்தின் வீழ வீரா' (வீழ வீர) மற்றும் படத்தின் தீம் மியூசிக் ஆகியவற்றின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த முக்கியப் பாடலாக 'செஞ்சுடரே' பாடல் குறைத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.இப்பாடல் மற்றும் திரைப்படம் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரை மையப்படுத்தி உருவாகியுள்ளது

சுயாதீனப் பாடல்கள் மூலம் 1000 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் தனுஷுடன் இணையும் முதல் பிரம்மாண்ட படம் இதுவாகும். சாய் அபயங்கர் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் இப்பாடலின் அறிவிப்பை பகிர்ந்துள்ளார்

அமரன்' திரைப்படப் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இத்திரைப்படத்தை இயக்குகிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்.கே. ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி (வில்லனாக), சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் நஸ்ருதின் ஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகளை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்ஷன் கதையாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான் செஞ்சுடரே விரைவில் வெள்யாகவுள்ளதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT