சினிமா

ஸ்ரீதேவி விருப்பத்தை நிறைவேற்றவில்லையே - ராணி முகர்ஜி வேதனை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றவில்லையே என்று பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். #Sridevi #RaniMukherjee

மாலை மலர்

இந்தி நடிகை ராணிமுகர்ஜி நடித்த ‘ஹிச்கி’ படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ராணிமுகர்ஜி அளித்த பேட்டியில்...

“ஸ்ரீதேவி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் நடித்த ‘சாந்தினி’, ‘லம்ஹே’ படங்களை பார்த்து வளர்ந்தேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. என் மகள் ஆதிரா பிறந்த பிறகு நானும் ஸ்ரீதேவியும் தோழிகளாகி விட்டோம். தாய்மை குறித்து எனக்கு அவர் பல ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார்.

என் வாழ்நாளில் இரண்டு முக்கியமானவர்களை இழந்துவிட்டேன். ஒன்று என் அப்பா. இன்னொன்று ஸ்ரீதேவி. நான் நடித்த ‘ஹிச்கி’ பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தேன். அப்போது ஸ்ரீதேவி துபாய் சென்று இருந்தார். அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து நான் நடித்த ‘ஹிச்கி’ படத்தை பார்க்க விரும்புவதாக கூறினார்.

என் படத்தை அவருக்கு போட்டுக்காட்டி அவருடைய கருத்தை தெரிந்து கொள்ள விரும்பினேன். ஸ்ரீதேவி என் படத்தை பார்க்க ஆசைப்பட்டும் பார்க்க முடியாமல் போய்விட்டதே” என்று வேதனை தெரிவித்துள்ளார்.