இந்த நிலையில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது.
ஊரடங்கு முடிந்தவுடன் இப் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா, தற்போது தன் முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.