சினிமா

இயக்குநர் ராம் - மிஷ்கினின் `சவரக்கத்தி' படத்திற்கு கிடைத்த வரவேற்பு

ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் - மிஷ்கின் நடிப்பில் உருவாகி வரும் `சவரக்கத்தி' படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் `சவரக்கத்தி'.

இயக்குநர் ராம் - பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலிவுட் படங்களை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன்ஸ் கைப்பற்றியிருந்தது. கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படம் தணிக்கை குழுவில் யு சான்றிதழை பெற்றிருக்கிறது. 

படம் பிப்ரவரியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.