சினிமா

சமையல் கலை நிபுணரை நாயகனாக்கிய ராஜுமுருகன்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன், அடுத்ததாக உருவாக்கி இருக்கும் கதைக்கு, நாயகனாக சமையல் கலை நிபுணரை தேர்வு செய்திருக்கிறார்.

“நல்ல கதை, திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்து விட்டது. கதாநாயகனை தேடினோம். சலித்துபோன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும், சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம்.

அங்கே அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்கராஜை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரைப்பார்த்து பேசிய போது இவர் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது.

SCROLL FOR NEXT