இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி `2.0' படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட்டு சீனாவில் சுமார் 15,000 திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.