சினிமா

என்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். #Superstar #Rajinikanth #Rajinikanthpoliticalentry

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று கூறியிருந்தார்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன் பாபுவும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்தார்.

இவர்கள் அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...’ என்று கூறியிருக்கிறார். #Superstar #Rajinikanth #Rajinikanthpoliticalentry

SCROLL FOR NEXT