டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்துள்ளார். படத்தின் இயக்குநருக்கும், நாயகிக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சமீபத்தில் அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டினார். படத்தின் இயக்குநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, அருவி படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள் என்று பாராட்டியிருக்கிறார்.
அதேபோல் படத்தின் நாயகி அதிதி பாலனையும், ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இந்நிலையில், படக்குழுவை நேரில் அழைத்த ரஜினி, இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.