சினிமா

ரஜினிகாந்த் சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்: அக்‌ஷய் குமார்

ரஜினிகாந்த் சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார் என்று இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கருத்து தெரிவித்துள்ளார். #Rajinikanth #AkshayKumar

அரசியல் பிரவேசம் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்து நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கடந்த டிசம்பர் 31-ந் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

இந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரிடம், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறும்போது, “ரஜினிகாந்த் நிச்சயமாக சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்” என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிற 26-ந் தேதி வெளியாக உள்ள ‘பேட் மேன்’ என்ற படம், கிராம மக்களுக்கு மலிவு விலையில் ‘நாப்கின்’ தயாரித்து வழங்கும் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. இதுகுறித்தும் அக்‌ஷய் குமார் தனது கருத்துகளை தெரிவித்தார். #Rajinikanth #AkshayKumar #2point0