இதுகுறித்து ரஜினி கூறுகையில், இயக்குனர் சங்கர் 3டி-யை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறார். படத்தில் நான் வரும் 3டி காட்சியை மானிட்டரில் பார்த்து மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக சங்கரை பாராட்டுகிறேன்.
எந்த ஒரு ஹாலிவுட்டின் 3டி படத்துக்கும் இந்த படம் சளைத்தது அல்ல. இந்த 3டி படத்தை பார்க்கும் மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன் என்றார்.
இயக்குனர் சங்கர் கூறுகையில், ரசிகர்கள் திரைப்படத்துக்குள் சென்று பயணிக்கிற உணர்வை இப்படம் உண்டாக்கும். நேரடியாக 3டி-யில் காட்சிப்படுத்தும் போது ஏற்படும் உணர்வு அற்புதமானது.
இது இக்கதைக்கு தேவைப்பட்டதால் 3டி-யில் படத்தை எடுத்தோம். நிறைய ஹாலிவுட் படங்கள் 2டி-யில் எடுத்து 3டி-க்கு மாற்றுவார்கள். இது நேரடியாக 3டி-யில் எடுக்கப்பட்ட படம் என்றார்.