சினிமா

`சங்கமித்ரா'வுக்கு முன்னதாக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராஷி கண்ணா ஏற்கனவே தமிழில் அதர்வா ஜோடியாக `இமைக்கா நொடிகள்' படத்திலும், சித்தார்த் ஜோடியாக `சைத்தான் கே பச்சா' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT