சினிமா

தீயாய் பரவும் வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த பி.எஸ்.மித்ரன்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு மித்ரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #PSMithran #Irumbuthiurai

மாலை மலர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

இந்த நிலையில், பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. 

முன்னதாக, மித்ரன் உதயநிதியுடன் இணையவிருப்பதாக தகவலட வெளியாகி இருந்தது. இவ்வாறு அடுத்தடுத்து தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மித்ரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

அதில், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார். #PSMithran #Irumbuthiurai