சினிமா

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி

அஜித், விக்ரம் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா திரிவேதி மகத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். #PriyankaTriveti #MahatRagavendra

மாலை மலர்

அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. 2003-ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை மணம் முடித்த பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். 

இவர் கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜனனம் திரைப்படம் 2004-ம் ஆண்டு வெளியானது. தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத ஹாரர் திரில்லர் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர்கள் மகேஷ் வெங்கடேஷ் இருவர் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

வரும் வாரம் முதல் பிரியங்கா படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

குழந்தைகள் வளரும் வரை நடிப்பில் இருந்து விலகி இருந்த பிரியங்கா கன்னடம், வங்க திரையுலகில் சில படங்களில் நடித்துவந்தார். இவர் தற்போது நடித்துள்ள ஹவாரா பிரிட்ஜ் திரைப்படம் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படமும் தமிழில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #PriyankaTriveti #MahatRaghavendra #YashikaAannand