சினிமா

திருமணம் குறித்த வெளியான தகவலுக்கு பிரியங்கா சோப்ரா விளக்கம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

மாலை மலர்

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டுக்கு சென்று, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்து, முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா, தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமாகி இருக்கிறார். 

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இது பற்றி விளக்கம் அளித்த அவர்...

“திருமணத்தை யாரும் திட்டமிட முடியாது. முதல் நமக்கு ஏற்றவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்படி எனக்கு உரிய வரை நான் கண்டுபிடிக்கும் போது நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். இப்போது, அது போன்ற ஒருவரை நான் கண்டு பிடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.