நடிகர் சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத மான் படத்தில் நடித்த ப்ரியா பவானி ஷங்கரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை ப்ரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.