சினிமா

எம்.ஜி.ஆர். முடித்த இடத்தில் தொடக்கத்தை உருவாக்கும் பிரபுதேவா

எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஆடும் பாடல் ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவில் செட் அமைக்கப்படுகிறது.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் கடந்த 1955-ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஒரு பிளாஸ்பேக் காட்சி இருப்பதாகவும், அந்த காட்சியில் தான் இரு படங்களுக்குமான இணைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ரூ.2 கோடி ரூபாய் செலவில் எடுத்து வருகின்றனர். இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

SCROLL FOR NEXT