சினிமா

மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபுதேவா!

சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த விஜய்யும், நடிகர் பிரபு தேவாவும் மீண்டும் புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். புதிய படம் குறித்த தகவல்களை பார்ப்போம்.

இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

மதன் கார்க்கியின் வரிகளுக்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

SCROLL FOR NEXT