சினிமா

‘பாகுபலி’ உருவான நேரத்தில் கையில் பணமில்லாமல் தவித்த பிரபாஸ்

‘பாகுபலி’ உருவான நேரத்தில் கையில் பணமில்லாமல் பிரபாஸ் தவித்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பெரும் பணக்கஷ்டத்தில் இருந்ததாக இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கு பிரபாஸுக்கு சம்பளமாக ரூ.20 கோடி கொடுத்தார்களாம். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வேறு வேறு படங்களில் நடித்தார்களே தவிர, பிரபாஸ் மட்டும் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளாமல் ‘பாகுபலி’க்காக காத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ஒருமுறை பிரபாஸுக்கு பணக்கஷ்டம் வந்துவிட்டதாம். இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில தயாரிப்பாளர்கள் அவர்களிடம் கால்ஷீட் வாங்குவதற்காக பணத்தோடு அவரது வீட்டில் போய் நின்றுள்ளார்கள். சிலர், பணத்தை கொடுத்த உதவியாக கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.