சினிமா

`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

`பாகுபலி' படத்தில் முக்கிய காட்சியில் பிரபாஸ் செய்ததை, நடிகர் உதயநிதி ஸ்டாலின் தான் நடித்துள்ள அடுத்த படமாக `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் செய்திருக்கிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும், டைகர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி, உதயநிதி நண்பனாக நடித்திருக்கிறார். மேலும் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதில் `பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் முக்கிய காட்சியில் பிரபாஸ், சிவ லிங்கத்தை தனது தோளில் தூக்கியபடி செல்வார். அதே போல் இந்த படத்தில் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மனின் சிலையை, உதயநிதி தனது தலைமீது சுமந்து கொண்டு காலில் செருப்பு அணியாமல் கிராமத்தையே சுற்றி வந்து நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் படமாக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT