சினிமா

சூர்யாவின் இரு படங்களை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஒரு படம் மற்றும் வெளியாக இருக்கும் படம் என இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டி.வி. கைப்பற்றியிருக்கிறது.

நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.