சினிமா

விக்ரம் மகனுக்காக களமிறங்கும் பிரபல இயக்குநர்கள்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் `வர்மா' படத்திற்காக பிரபல இயக்குநர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Varma #DhruvVikram

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகி இருக்கிறார். 

பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் ராஜு முருகன் எழுதுகிறார் என்பது நாம் அறிந்ததே. 

இந்நிலையில், படத்தின் திரைக்கதைக்காக நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா, ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் இணைந்து பணியாற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் நாயகி தேர்வு நடந்து வருகிறது. நாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram