சினிமா

பிரபல காமெடி நடிகர் முனிஸ்காந்துக்கு சென்னையில் திருமணம்

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் முனிஸ்காந்த்துக்கு, தேன்மொழி என்பவருடன் சென்னையில் வைத்து திருமணம் முடிந்தது. #Munishkanth

மாலை மலர்

`ஈசா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராமதாஸ். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு தனது பெயரை முனிஸ்காந்த் என மாற்றிக் கொண்டார். 

முண்டாசுப்பட்டி படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நகையை ஏற்படுத்தும்படி இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாக முனிஸ்காந்த் ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, பசங்க 2, டார்லிங் 2, மாநகரம், மரகத நாணயம், வேலைக்காரன், குலேபகாவலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கலகலப்பு-2 படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிக்கும்படியாகவே இருந்தது. 

இந்நிலையில், முனிஸ்காந்த்துக்கும், தேன்மொழி என்பவருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைத்து இன்று திருமணம் நடந்தது. முனிஸ்காந்த் கைவசம் தற்போது சண்டக்கோழி-2, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Munishkanth