சினிமா

தனுஷ் படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் படத்தில் இணைந்துள்ளனர். #DD2 #Dhanush

தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

இந்த நிலையில், பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஏ.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி ராவ் ஹிடாரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தின் கலை பணிகளை முத்துராஜ் மேற்கொள்கிறார். #DD2 #Dhanush