சினிமா

‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

பீட்சா மேற்கத்திய உணவு என்றாலும் நம் ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி சமைக்க வேண்டும் என்பது போல ஒரு வசனம் இதில் இடம் பெற்றுள்ளது. அதை முக்கியமானதாக கருதுகிறேன்.

‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டிசம்பர் 4, 2026 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இவ்விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

பீட்சா பாய்ஸ் படத்தின் இசைவெளியீட்டு விழா

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் சிவம் சங்கர்.

இப்படத்தில் சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 4 அன்று வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீடு விழாவானது சென்னையில் நடைப்பெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் சஹானா சங்கர், “எங்கள் மகனின் கனவுக்காகவே இந்த படம் தொடங்கப்பட்டது. தற்பொழுது ஏஐ காரணமாக நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது.

ஆனால், அதையெல்லாம் தாண்டி திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை இந்தப் படம் மூலம் தர வேண்டும் என்றும் விரும்பினோம். இது எங்களுடைய முதல் படம். உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்" என்று இசை வெளியீட்டு விழாவில் உரையாடினார்.

திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியதாவது

இயக்குநர் பேரரசு, "பீட்சா பாய்ஸ் படத்தின் டிரெய்லர், பாடல்கள், இசை எல்லாமே நன்றாக வந்துள்ளது. பீட்சா மேற்கத்திய உணவு என்றாலும் நம் ஊர் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி சமைக்க வேண்டும் என்பது போல ஒரு வசனம் இதில் இடம் பெற்றுள்ளது. அதை முக்கியமானதாக கருதுகிறேன்.

ஏனெனில், இப்போதைய தலைமுறையின் உணவு வழக்கமே வேறொன்றாக மாறிவிட்டது. படக்குழுவினரும் யூத் டீமாக உள்ளது. திருப்பாச்சி படத்தில் எல்லா பாடல்களும் நானே எழுதிய போது எல்லோரும் என்னை திட்டினார்கள். ஆனால், இப்போது இயக்குநர்கள் பாடல் எழுதுவது இசையமைப்பது எல்லாம் வழக்கமாகிவிட்டது.

நாயகன், நாயகி இருவரும் பெரிய இடத்திற்கு வருவார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று திரைப்படம் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசினார்.

படத்தின் நடிகர் பேசும்பொழுது திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், மதன் சாருக்கு நன்றி. காமெடி, காதல், ஆக்‌ஷன் என படத்தில் எல்லாமே உள்ளது. நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT