குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் பிரியங்கா சோப்ரா 
சினிமா

குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாலை மலர்

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18-ந்தேதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனால் பிரியங்கா கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளார்.

அதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.